விவாகரத்து கேட்ட மனைவி; தானமாக தந்த கிட்னியை திரும்பக் கேட்ட கணவன்- நீதிமன்றம் ட்விஸ்ட்!

United States of America Divorce
By Sumathi Feb 21, 2024 09:37 AM GMT
Report

 விவாகரத்து கேட்ட மனைவியிடம், அவரது கணவர் தானம் செய்த கிட்னியை திரும்பக் கேட்டுள்ளார்.

விவாகரத்து

அமெரிக்கவைச் சேர்ந்தவர்கள் மருத்துவர்களான ரிச்சர்ட் பட்டிஸ்டா- டோமினிக் பார்பரா என்ற தம்பதிகள். கடந்த 1990ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

ரிச்சர்ட் பட்டிஸ்டா - டோமினிக் பார்பரா

மனைவி பார்பராவிற்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதை அறிந்த அவரது கணவர் தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்க ஒப்புக்கொண்டு அறுவை சிகிச்சையும் நடைபெற்றது.

கோவா, அயோத்தியால் வந்த பிரச்சனை - விவாகரத்து கோரிய மனைவி - அதிர்ச்சி சம்பவம்!

கோவா, அயோத்தியால் வந்த பிரச்சனை - விவாகரத்து கோரிய மனைவி - அதிர்ச்சி சம்பவம்!

நீதிமன்றம் தீர்ப்பு

இதனையடுத்து, கடந்த 2009ம் ஆண்டு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பார்பரா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

விவாகரத்து கேட்ட மனைவி; தானமாக தந்த கிட்னியை திரும்பக் கேட்ட கணவன்- நீதிமன்றம் ட்விஸ்ட்! | Usa Man Ask Return Kidney From Divorce Asking Wife

அதில், தனது மனைவி விவாகரத்து கோருவதால் அதை அளிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் தான் தானமாக வழங்கிய சிறுநீரகத்தை திரும்ப வழங்க வேண்டும் அல்லது 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக தனக்கு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமெரிக்காவின் உறுப்பு தானம் சட்டங்களின்படி, ஒருவர் அவரது உடல் உறுப்புகளை தானமாக மட்டுமே வழங்க முடியும். அதற்காக இழப்பீடு தொகை அல்லது அந்த உறுப்புகளுக்கான தொகையை நிர்ணயிக்க முடியாது என தீர்ப்பளித்து வழக்கை தள்ளுபடி செய்தது.