வீட்டை விற்றுவிட்டு அந்த ஓனருக்கே தெரியாமல்.. 7ஆண்டுகளாக பெண் செய்த செயல் - அதெப்படி?
வீட்டை விற்றுவிட்டு 7 ஆண்டுகளாக அதே வீட்டில் பெண் ஒருவர் வசித்து வந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீடு விற்பனை
சீனா, ஜிங்சு மாகாணத்தை சேர்ந்தவர் ஜாங். இவர் இருந்த வீட்டை லீ என்பவருக்கு ரூ.2.24 கோடிக்கு விற்றுள்ளார். லீ மிகவும் பிஸியான பிஸ்னஸ் மேன். விடுமுறையில்தான் வீட்டில் அதிக நேரத்தை கழிப்பார்.
இவ்வாறு 7 ஆண்டுகள் கடந்துள்ளது. ஆனால் இதற்கிடையில் வீட்டில் இவருக்கே தெரியாமல் வேறு யாரோ இருப்பது போன்று அவருக்கு தோன்றியுள்ளது. பேய் என்று யோசித்து அதற்கான விஷயங்களையும் செய்துள்ளார். ஆனால் அதே பிரச்சனை தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் வீடு முழுவதையும் சுத்தம் செய்துள்ளார். இறுதியாக தோட்டத்தை சுத்தம் செய்ய எண்ணியுள்ளார். அங்கு ஒரு கழிவறை இருந்துள்ளது. அதனை சுத்தம் செய்ய முயல்கையில், அது உண்மையான கழிவறை கிடையாது. கதவுக்கு பின் ஒரு படிக்கட்டு செல்கிறது.
பெண்ணுக்கு அபராதம்
அது ஒரு அறைக்கு அழைத்து சென்றது. அந்த அறை விசாலமாக, ஒரு ஆள் வசிப்பதற்கு ஏற்றார் போல இருந்துள்ளது. அறையின் ஒரு மூலையில் மினி பார் இருந்துள்ளது. தொடர்ந்து பார்த்ததில் பழைய ஓனர் ஜாங் என்ற பெண் அங்கு இருந்துள்ளார். உடனே வெளியே போகும்படி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
ஆனால், வீட்டை விற்ற பத்திரத்தில் இந்த பேஸ்மென்ட் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்றும், எனவே இது எனக்கு சொந்தமானது என்றும் ஜாங் வெளியே போக மறுத்துள்ளார்.
இதனையடுத்து இதுதொடர்பாக லீ வழக்கு தொடர்ந்ததில், ஜாங் உடனடியாக இடத்தை காலி செய்ய வேண்டும். இத்தனை நாள் இங்கு தங்கியதற்கு அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.