'30 லட்சம் சம்பளம் 3 BHK வீடு’ - விவாகரத்தான பெண்ணின் கல்யாண கண்டிஷன்!

Marriage
By Sumathi Oct 14, 2024 03:00 PM GMT
Report

விவாகரத்தான பெண்ணின் கல்யாண நிபந்தனைகள் தலைசுற்ற வைத்துள்ளது.

திருமண நிபந்தனைகள்

பிஎட் பட்டம் பெற்ற விவாகரத்து பெற்ற பெண் ஒருவர் ஆண்டுக்கு ரூ.1.3 லட்சம் சம்பாதிக்கிறார். இவர் தற்போது திருமணம் செய்வதற்கு மணமகன் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக சில நிபந்தனைகளையும் வைத்துள்ளார். என்னவென்றால், மணமகன் இந்தியா, அமெரிக்கா அல்லது ஐரோப்பாவில் குடியேறி, குறைந்தபட்ச ஆண்டு சம்பளம் ரூ. 30 லட்சம் வாங்க வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியராக இருந்தால் அவரது சம்பளம் ஆண்டுக்கு $96,000 (சுமார் ரூ. 80 லட்சம்) இருக்க வேண்டும்.

இரண்டாவது திருமணம் செய்ய இனி... அரசிடம் அனுமதி அவசியம்! எங்கே?

இரண்டாவது திருமணம் செய்ய இனி... அரசிடம் அனுமதி அவசியம்! எங்கே?

கொதிக்கும் நெட்டிசன்கள்

MBA அல்லது MS பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவர் ஒரு மென்பொருள் பொறியாளராக இருக்க வேண்டும். வெளிநாட்டு பயணங்கள் மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மீது தனக்கு விருப்பமுள்ளது. எனவே, தனது கணவரும் இந்த ஆர்வங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

வருங்கால கணவருக்கு 3+ BHK வீடு இருக்க வேண்டும். தன்னைச் சார்ந்திருக்கும் எனது பெற்றோர் அவர்களுடன் வசிக்க வேண்டும். பணியின் காரணமாக, வீட்டு வேலைகளைச் செய்ய மாட்டேன். சமையல்காரர் மற்றும் பணிப்பெண்ணை பணியமர்த்த வேண்டும்.

மாமியார் மற்றும் மாமனார் தங்களுடன் வசிக்கக்கூடாது என இந்த தகவல்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களது எதிர்வினையான கருத்துக்களை குவித்து வருகின்றனர்.