மர்மான முறையில் இறந்து கிடந்த புலி.. வயிற்றில் பெண்ணின் தலைமுடி, கம்மல் - அதிர்ச்சி தகவல்!

Kerala India Death Murder
By Vidhya Senthil Jan 28, 2025 10:45 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

 இறந்த புலியின் வயிற்றில் பெண்ணின் தலைமுடி, கம்மல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 இறந்த புலி

கேரள மாநிலம், வயநாட்டைச் சேர்ந்த ராதா என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு புலி தாக்கி உயிரிழந்தார். அவரின் சில உடல் பாகங்களை அந்த புலி தின்றதாகக் கூறப்படுகிறது.  இதனைத் தொடர்ந்து கேரள அரசு புலியை உயிருடனோ அல்லது சுட்டுக் கொன்றோ பிடிக்க அனுமதி வழங்கியது.

இறந்த புலியின் வயிற்றில் பெண்ணின் தலைமுடி, கம்மல்

இந்த நிலையில் நேற்று புலியை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.ஆனால், பிலாக்காவு பகுதியில் அந்த புலி இறந்த நிலையில் கிடந்துள்ளது.இதனைக் கண்டு வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

தன் மீது மோதிய கார்.. தேடி கண்டுபிடித்து பழிவாங்கிய நாய் - நள்ளிரவில் நடந்த பகீர் சம்பவம்!

தன் மீது மோதிய கார்.. தேடி கண்டுபிடித்து பழிவாங்கிய நாய் - நள்ளிரவில் நடந்த பகீர் சம்பவம்!

இதனையடுத்து புலியின் உடலை மீட்ட அதிகாரிகள் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் புலியின் கழுத்து பகுதியில் சில காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.அதுமட்டுமில்லாமல் புலியின் வயிற்றுக்குள் பெண்ணின் தலைமுடி, கம்மல், மேலாடை பட்டன் போன்றவை இருந்துள்ளது.

  அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவம் குறித்து வயநாடு வனத்துறையினர் கூறுகையில் , "சுமார் 7 வயது பெண் புலியின் கழுத்து பகுதியில் 4 இடங்களில் கடுமையான காயங்கள் இருந்துள்ளது.புலியின் வயிற்றுக்குள் பெண்ணின் தலைமுடி, கம்மல், மேலாடை பட்டன் போன்றவை இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இறந்த புலியின் வயிற்றில் பெண்ணின் தலைமுடி, கம்மல்

காட்டில் வேட்டையாடும் திறனை இழந்த காரணத்தாலேயே பெண்ணை தாக்கிக் கொன்று தின்றிருக்கலாம் என்று கூறினார்.மேலும்  பிரேத பரிசோதனை  முடிவுகள் வந்த பிறகே இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று தெரிவித்தார்.