குரங்கால் உயிரிழந்த மாணவி - மொட்டை மாடியில் நிகழ்ந்த சோகம்
குரங்கு தள்ளி விட்டதில் பள்ளி மாணவி உயிரிழந்துள்ளார்.
பள்ளி மாணவி
பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் உள்ள மகர் கிராமத்தை சேர்த்த பிரியா என்பவர் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
பீகாரில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், நேற்று(26.01.2025) மதியம் பிரியா வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து படித்து வந்துள்ளார்.
குரங்கால் உயிரிழப்பு
அந்த பகுதியில் ஏற்கனவே குரங்கு தொல்லை அதிகமாக உள்ள நிலையில், குரங்கு கூட்டம் ஒன்று அவர்களின் வீட்டின் மொட்டை மாடிக்கு வந்துள்ளது. இதனால் பதற்றமடைந்த பிரியா, குரங்கிடமிருந்து தப்ப படிக்கட்டுகளை நோக்கி ஓடியுள்ளார்.
அப்போது குரங்கு ஒன்று அவர் மீது பாய்ந்து அவரை கடுமையாக தள்ளியது. இதில் பிரியா மாடியிலிருந்து கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து பிரியாவின் பெற்றோர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்துகாவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.