உறவினரை கொன்றதாக சிறையில் இருந்த நால்வர் - 17 ஆண்டுகளுக்கு பிறகு உயிருடன் வந்த உறவினர்
கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட நபர் 17 ஆண்டுகளுக்கு பிறகு உயிரோடு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயமான நபர்
பீகார் மாநிலம், தியோரியாவில் வசித்து வந்தவர் நாதுனிபால் (50). இவரது தந்தை ராம்சந்திர பால் இறந்த பிறகு, அவரது மாமா ரதி பால் இவரை வளர்த்து வந்தார்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 17, 2008 ஆம் ஆண்டு திடீரென நாதுனிபால் காணாமல் போய்விட்டார். நாதுனிபாலின் நிலத்தை அபகரிப்பதற்காக அவரது மாமா ரதி பால் மற்றும் மாமாவின் மகன்கள் சேர்ந்து அவரை கொலை செய்து விட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
உறவினர்களுக்கு சிறை
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 4 போரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 8 மாதம் சிறையில் இருந்த இவர்கள் அதன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் ஜான்சியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிக்கொண்டிருந்த நபரை பிடித்து காவல் துறையினர் அவரின் ஊர் மற்றும் பெயர் குறித்து விசாரித்தனர். அவர் கூறிய தகவலை வைத்து, பீகார் அகோதி கோலா காவல் நிலையத்தை தொடர்பு கொண்டபோது, அந்த நபர் கொல்லப்பட்டதாக கருதப்படும் நாதுனிபால் என தெரிய வந்தது.
உயிருடன் வந்ததால் அதிர்ச்சி
இதையடுத்து காவல் துறையினர் அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த போது, அவரை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம் அடைந்தனர்.இந்த கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அவரது மாமா இறந்து விட்ட நிலையில் தாங்கள் நிரபராதிதான் என தெரிந்த அவரது மாமா மகன்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
இந்த வழக்கு 17 ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், நாதுனிபால் 17 ஆண்டுகளாக தனது அடையாளத்தை மறைந்து, மயமானது குறித்து காவல்துறையினர் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.