விஜய் வழங்கிய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி அனுப்பிய பெண் - பரபரப்பு சம்பவம்

Vijay Karur Thamizhaga Vetri Kazhagam
By Sumathi Oct 28, 2025 06:34 AM GMT
Report

விஜய் வழங்கிய ரூ.20 லட்ச இழப்பீட்டை பெண் ஒருவர் திருப்பி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.20 லட்ச இழப்பீடு

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்வில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து விஜய் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்ததுடன்,

சங்கவி

பலியான 41 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க முடிவு செய்தார். இந்த தொகை நேரடியாக வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டது. மேலும், அவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வந்து,

ஓட்டுப் பெட்டியையும் பனையூரில் வைக்க சொல்வாரா? விஜய் மீது சீமான் கடும் விமர்சனம்

ஓட்டுப் பெட்டியையும் பனையூரில் வைக்க சொல்வாரா? விஜய் மீது சீமான் கடும் விமர்சனம்

பெண் வேதனை

தனிப்பட்ட முறையில் ஆறுதல் கூறினார். இந்நிலையில், உயிரிழந்தவர்களில் ஒருவராக கோடங்கிபட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவியான சங்கவி, விஜய் அளித்த ரூ. 20 லட்சத்தை திருப்பி அனுப்பியதாக அறிவித்துள்ளார்.

vijay

இதுகுறித்து அவர் கூறுகையில், கரூர் நெரிசலில் என் கணவன் ரமேஷ் உயிரிழந்தார். விஜய் நேரில் வந்து ஆறுதல் தெரிவிக்கவில்லை என்பதால் பணத்தை திருப்பி அளித்ததாகவும்,

பணம் வேண்டாம் ஆறுதல் மட்டுமே வேண்டும். தனக்கு தெரியாமல் தனது உறவினர்களை தவெக நிர்வாகிகள் அழைத்து சென்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.