“திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும்” - ஓபிஎஸ் பரபரப்பு ஸ்டேட்மெண்ட்

M K Stalin Tamil nadu DMK O. Panneerselvam
By Sumathi Oct 27, 2025 02:00 PM GMT
Report

திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

திமுக தான் மீண்டும்.. 

சிவகங்கை, காளையார்கோவிலில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எதிர்க்கட்சிகள் பிரிந்துகிடக்கும் சூழலில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.

o panneerselvam - mk stalin

திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என பொதுமக்கள் பேசிக் கொள்கிறார்கள். பொதுமக்கள்தான் பேசிக்கொள்கிறார்கள். என் மீது பழி போட்டுவிடாதீர்கள். மீண்டும் திமுகவுக்கே வாய்ப்பு என்பது கண்கூடாக தெரிகிறது. விஜய் கரூரில் உயிரிழந்தோரின் உறவினர்களை வரவழைத்து ஆறுதல் கூறியது வரவேற்கத்தக்கது.

திமுக அரசு படைத்திருப்பது சாதனை அல்ல; கொடும் வேதனை - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

திமுக அரசு படைத்திருப்பது சாதனை அல்ல; கொடும் வேதனை - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

ஓபிஎஸ் பேச்சு

விஜய்யுடன் கூட்டணி அமைப்பது பற்றி கேட்கிறீர்கள். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். அதிமுகவை தொண்டர்களுக்கான இயக்கமாக எம்ஜிஆர் உருவாக்கினார். திமுகவில் இருந்து எம்ஜிஆரை நீக்குவதற்கு அக்கட்சி பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர்தான் காரணம்.

“திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும்” - ஓபிஎஸ் பரபரப்பு ஸ்டேட்மெண்ட் | Ops Opinion About Dmk Again Rule Tamilnadu

தனக்கு ஏற்பட்ட நிலை இனி யாருக்கும் ஏற்படக் கூடாது என்பதற்காக தான் தொண்டர்கள் மூலமாக அதிமுக பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் விதிமுறையை கொண்டு வந்தார். தற்போது அந்த விதிமுறையை மாற்றிவிட்டனர். மீண்டும் அந்த விதிமுறையை நிலைநாட்டவே

நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறோம். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் சரியாகத்தான் நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.