'மோந்தா' புயல் ஆடப்போகும் ஆட்டம் - தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்!
மோந்தா புயல் அலர்ட் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மோந்தா புயல்
தமிழகத்தில் கடந்த 16 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் தினமும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நீர் நிலைகளில் தண்ணீர் மட்டம் கடகடவென உயர்ந்து வருகிறது.

கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில்,
வெதர்மேன் அலர்ட்
"KTCC (சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்) மழை அறிவிப்பு - மோந்தா புயலின் வெளிப்புற மேற்குப் பகுதிகள் சென்னையைத் தொடுகின்றன. நாள் முழுவதும் தூறல், லேசான மழை முதல் மிதமான மழை வரை, சில சமயங்களில் கடுமையான மழை தொடரும்.

ஆந்திராவுக்கு அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் பழவேற்காடு பகுதிகளில் மட்டுமே கனமழை பெய்யும். வட சென்னையில் மட்டும் இந்த கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. வட சென்னையுடன் ஒப்பிடும்போது தென் சென்னையில் மழை சற்று குறைவாக இருக்கும்.
ஒட்டுமொத்தமாக இந்த மோந்தா புயலால் சென்னை அல்லது சென்னை சுற்று வட்டார மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பற்றி கவலைப்பட பெரிய விஷயம் எதுவும் இல்லை." என தெரிவித்துள்ளார்.