சென்னை மக்களே தயாராக இருங்கள்; வெளுக்கப்போகுது அடமழை - பிரதீப் ஜான்!
சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெதர் ரிப்போர்ட்
தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் புதிய கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் பிரதீப் ஜான், சென்னை மக்களே அடுத்தக் கட்ட மழைக்கு தயாராகுங்கள்..
பிரதீப் ஜான் தகவல்
இன்று இரவு முதல் நாளை காலை வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வட கடலோர மாவட்டங்களை நோக்கி நகர்வதால், இன்று இரவு முதல் நாளை காலை வரை மயிலாடுதுறை முதல் சென்னை வரை பரவலான மழையை எதிர்பார்க்கலாம்.
இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் நாளை காலை 100 மிமி வரை மழை பெய்திருக்கும் என்று கூறி இருக்கிறார். அதேபோல் நாகை மற்றும் திருவாரூர் பகுதிகளில் இரவு முதல் மழை கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்று தெரிவித்துள்ளார்.