கணவரை வாடகைக்கு விட்டு வருமானம் பார்க்கும் மனைவி , எங்கு தெரியுமா ?

Viral Photos
By Irumporai Jun 30, 2022 07:44 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

குடும்ப செலவினை சமாளிக்க தனது கணவரை வாடகை விட்டு வருமானம் பார்த்துள்ள சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.

இன்றைய பரப்பான உலகில் வாழ்க்கை நடத்துவது என்பது மிகவும் கடினம் , குறிப்பாக பணம் ஈட்டுவது என்பது குதிரை கொம்பாக உள்ளது என பலர் கூறுவதை கேட்டிருப்போம் .

பொதுவாக குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி வரும்போது நகைகளை அல்லது முக்கியமான பொருட்களை அடகு வைப்பார்கள் வாடகைக்கு விடுவார்கள் அதன்மூலம் வரும் வருமானத்தை வைத்து குடும்ப பொருளாதாரத்தை ஈடு செய்வார்கள்.

கணவரை வாடகைக்கு விட்ட மனைவி

இந்த நிலையில் குடும்ப செலவிற்காக தனது கணவனையே வாடகைக்கு விட்டுள்ளார் இங்கிலாந்தில் உள்ள லாரா என்ற பெண். இங்கிலாந்தில் வசித்து வருபவர்கள் தான் லாரா மற்றும் ஜேம்ஸ் .

கணவரை வாடகைக்கு விட்டு வருமானம் பார்க்கும் மனைவி , எங்கு தெரியுமா ? | Woman Rents Out Her Husband Around The House

இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜேம்ஸ் வேலையினை விட்டுவிட்டு குழந்தைகளை கவனித்து வந்துள்ளார். குழந்தைகளை கவனத்திதுக் கொண்டே ஒய்வு நேரத்தில் மரசான்களை பயனபடுத்தி வீட்டினை அழக்காக்கியுள்ளார் ஜேம்ஸ் .

கணவர் ஜேம்ஸ்ன் திறனை கண்டு வியந்த லாரா இவரின் திறமையினை வைத்து சம்பாதிக்கலாம் என தனது கணவரை வாடகைக்கு விட்டு அதன் மூலம் நன்றாக பணம் சம்பாதித்துள்ளனர்.

கணவரை வாடகைக்கு விட்டு வருமானம் பார்க்கும் மனைவி , எங்கு தெரியுமா ? | Woman Rents Out Her Husband Around The House

இது குறித்து கூறும் லாரா: தனது கணவர் ஜேம்ஸ் மர சாமன்கள் மூலம் வீட்டு அலமாரிகள் போன்ற அழகு பொருட்களைச் செய்வதில் திறமையானவர். எனவே அவரின் திறமையினை வீணாக்காமல் "ரென்ட் மை ஹேண்டி ஹஸ்பண்ட்" இணையதளத்தைத் தொடங்கியதாகவும் பேஸ்புக் மற்றும் பிரபலமான நெக்ஸ்ட்டோர் செயலியில் விளம்பரம் செய்ததாகவும் கூறினார்.

கணவரால் வருமானம் பார்த்த லாரா

தற்போது தனது கணவர் ஜேம்ஸ் -ன் திறமையினை வாடிக்கையாளர்கள் பாராட்டுவதாகக் கூறும் லாரா கட்டணங்களைக் குறைந்தபட்சமாக வைத்து, மக்களிடம் நேர்மையாக இருக்க விரும்புகிறோம்.

பட்ஜெட்டில் இருப்பது எப்படி இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும் எனவே ஊனமுற்றோர், பராமரிப்பாளர்கள், யுனிவர்சல் கிரெடிட்டில் உள்ளவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாங்கள் தள்ளுபடிகளை வழங்குகிறோம் எனக் கூறியுள்ளார்.      

உனக்கென்ன வேணும் சொல்லு : 27 ஆண்டுகளாக லீவு எடுக்காமல் சென்ற அப்பாவுக்கு 1 கோடி நிதி திரட்டிய தங்க மகள்