உனக்கென்ன வேணும் சொல்லு : 27 ஆண்டுகளாக லீவு எடுக்காமல் சென்ற அப்பாவுக்கு 1 கோடி நிதி திரட்டிய தங்க மகள்

United States of America Viral Photos
By Irumporai Jun 30, 2022 06:53 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

27 ஆண்டுகளாக விடுமுறை எடுக்காமல் பணியாற்றிய தந்தைக்கு ரூ.1 கோடி நிதி திரட்டிய மகளது செயல் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆயிரம் உறவுகள் வரட்டுமே அப்பா மகள் உறவு என்பது என்றுமே அழகானது , ஒரு மகளுக்கு பல உறவுகள் வந்தாலும் அப்பாதான் உலகம் ,அப்பாதான் முதல் ஹீரோ. இந்த நிலையில் அமெரிக்காவில் 27 ஆண்டுகளாக விடுமுறை எடுக்காமல் பணியாற்றிய தந்தைக்கு இணையத்தின் மூலம் ஒரு கோடி நிதி திரட்டியுள்ளார்.

அப்பாவுக்கா நிதி திரட்டிய மகள்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மெக்கரன் சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் பர்கர் கிங் என்ற உணவு நிறுவனத்தில் சமையல்காரராகவும் , காசாளராகவும் 27 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காமல் பணிபுரிந்து வந்தவர்தான் போர்டு .

போர்டின் இந்த செயலை பாராட்டிய நிறுவனம் அவருக்கு அன்பளிப்பாக சிறிய பரிசு ஒன்றை வழங்கியது, ஆனால் கெவின் போர்டின் மகள் செரினா தனது தந்தையின் 27 வருடங்களாக விடுப்பே எடுக்காமல் சென்றதால் தனது தந்தைக்காக நிதி திரட்டும் செயலில் இறங்கினார்.

உனக்கென்ன வேணும் சொல்லு  :   27 ஆண்டுகளாக  லீவு எடுக்காமல் சென்ற அப்பாவுக்கு 1 கோடி  நிதி திரட்டிய தங்க மகள் | Nternet Raises 200000 Employeeworked 27 Years

இந்த நிதி திரட்டும் செயலினை கோ- பண்ட் மீ பக்கத்தில் தெரிவித்துள்ளார். (அதாவது கோ- பண்ட் மீ என்பது நிதி திரட்டுவதற்காக உள்ள ஒரு செயலி.) செரினாவின் இந்த பதிவினை பார்த்த இணையவாசிகள் கெவின் போர்டுக்கு தங்களால் இயன்ற நிதியினை வாரிக்கொடுத்தனர் .

அது மட்டும் அல்ல அமெரிக்காவின் பிரபல நகைச்சுவை நடிகர் 5000 டாலரை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையின் கெவின் போர்டின் சேவையினை பாரட்டி இணையவாசிகள் கொடுத்த தொகையானது இந்திய மதிப்பில் ரூ 1 கோடியினை தொட்டுவிட்டதாக செரினா கூறியுள்ளார்.

கோடிகளை வாரி வழங்கிய இணையவாசிகள்

போர்டிற்காக உணவு நிறுவனம் சிறிய பரிசுதான் வழங்கியது ஆனால் ஆனால் செரினா தனது தந்தையினை தற்போது கோடிகளை பரிசாக வழங்கியுள்ளார் அவரது செல்ல மகள்.

கெவின் போர்டு இந்த பணத்தை என்ன செய்ய திட்டமிட்டுள்ளார் என்பது குறித்து, அவர் தனது பேரக்குழந்தைகளுக்கு செலவிட விரும்புவதாகவும், அதேபோல் ஒரு ஆட்டோமொபைல் வாகனம் வாங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

””மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று" இந்த வரிகளை உண்மையாக்கியுள்ளார் அமெரிக்காவில் உள்ள செரினா .  

என்னடா இது இந்த கடலைக்கு வந்த சோதனை : கடலையை கடிக்கும் அணில் வைரலாகும் வீடியோ