என்னடா இது இந்த கடலைக்கு வந்த சோதனை : கடலையை கடிக்கும் அணில் வைரலாகும் வீடியோ

Viral Video
By Irumporai Jun 29, 2022 08:11 PM GMT
Report

கடலைக்காய் சாப்பிட கடுமையாகப் போராடும் அணில் ஒன்றின் க்யூட் வீடியோ ட்விட்டரில் வைரலாகி உள்ளது.

மனிதர்களுடன் எளிதில் பழகிடாத க்யூட் விலங்குகளில் ஒன்றான அணில்கள் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் சமீபகாலமாக தொடர்ந்து ட்ரெண்ட் ஆகி வருகிறது.

வைரல் வீடியோ

சிட்டுக் குருவிகளைப் போலவே மரங்களில் பொதுவாக உலாவியும், தயங்கித் தயங்கி மனிதர்களுடன் பழகக் கூடியவையுமான அணில்கள் எப்ப்போதுமே மனிதர்களை வசீகரிக்கக்கூடியவையாக உள்ளன.

அந்த வகையில் முன்னதாக கடலைக் காய் சாப்பிட கடுமையாகப் போராடி, வாயில் கடலையை அடக்கிக் கொண்டு ஓடும் அணில் ஒன்றின் வீடியோ ட்விட்டரில் வைரலாகி உள்ளது.

அணிலும் கடலையும்

கடுமையாகப் போராடி இறுதியாக கடலை ஓட்டைக் கடித்து தன் வாயில் கடலையை அடக்கிக் கொண்டு இன்னொரு கடலையையும் அணில் தூக்கிக் கொண்டு ஓடும் இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் ஹிட் அடித்துள்ளது.

மேலும், 5 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ள இந்த வீடியோ, 30 ஆயிரம் லைக்குகளையும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரீட்வீட்டுகளையும் பெற்று ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்ட் ஆகி வருகிறது