6வது டெலிவரி - கருத்தடைக்கு பயந்து குழந்தையை விட்டு பெண் தப்பி ஓட்டம்!

Chennai Pregnancy
By Sumathi Sep 19, 2025 08:36 AM GMT
Report

பெண் கருத்தடைக்கு பயந்து மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்தடை

சென்னை தாம்பரத்தை அடுத்த சோமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (33). இவரது மனைவி மங்கை (31).

6வது டெலிவரி - கருத்தடைக்கு பயந்து குழந்தையை விட்டு பெண் தப்பி ஓட்டம்! | Woman Refuse Family Planning Ran Away Chennai

திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் என மொத்தம் 5 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், ஆறாவது முறை கர்ப்பம் தரித்த மங்கை, பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆறு குழந்தை பெற்ற நிலையில், கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மங்கையிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை!

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை!

பெண் தப்பி ஓட்டம்

ஆனால், அறுவை சிகிச்சைக்கு பயந்த மங்கை, பெற்ற குழந்தையை மருத்துவமனையிலேயே தவிக்க விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்த அவரது கணவர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

tambaram GH

தகவலின் பேரில் போலீசார் மங்கையிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், தாயை பிரிந்த குழந்தை பால் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த நிலையில், மருத்துவர்கள் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்து தாய் மங்கையிடம் ஒப்படைத்தனர்.