ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண் - மருத்துவ உதவியாளரால் நேர்ந்த கொடூரம்!
ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண் மருத்துவ உதவியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் நுரையீரல் பிரச்சனை காரணமாக அங்குள்ள மருத்துவமனை ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ உதவியாளர் ஒருவர் அதிகாலை 4 மணியளவில் ஐசியூ வார்டுக்குள் நுழைந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
போலீசார் விசாரணை
அப்போது அந்த பெண் கூச்சலிட்டதால் அவருக்கு மயக்க ஊசி செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்த பிறகு அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கணவரிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்ததையடுத்து, மருத்துவ உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி ஆதாரங்களை கைப்பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.