ஆண் நண்பர்களுடன் சாலையில் சென்ற பெண் - கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை!
இளம் பெண்ணை கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
வேலூர், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண். தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், ஸ்ரீபெரும்புதூர் எம்ஜிஆர் நகரில் தங்கி இருந்து சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறேன்.
இரண்டு தினங்களுக்கு முன்பாக ஆண் நண்பருடன் சென்று ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு நடந்து வந்தேன். அப்போது பின் தொடர்ந்து வந்த இரண்டு பேர் கத்தி முனையில் மிரட்டி வடமங்கலம் செல்லும்
விசாரணை
சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், போலீஸார் வழக்குபதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.