மகன், மகளுடன் ரயிலில் பாய்ந்த பெண் காவலர் - உடல் சிதறிய பலியான பரிதாபம்!
பெண் காவலர் குழந்தைகளுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன உளைச்சல்
மதுரை, அய்யர்பங்களாவில் சுப்புராஜ் – ஜெயலட்சுமி தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் ய்யர்பங்களாவில் சுப்புராஜ் – ஜெயலட்சுமி தம்பதியினர் வசித்து வந்தனர்.
சமீபத்தில் திருச்சி ரயில்வே காவல் நிலையத்துக்கு மாறுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயலட்சுமி கடந்த சில நாட்களாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்துள்ளார்.
தற்கொலை
இந்நிலையில், தனது இரண்டு குழந்தைகளுடன் ஜெயலட்சுமி இருசக்கர வாகனத்தில் சமயநல்லூர் அருகே சென்றுள்ளார். அதன்பின், மகன் காளிமுத்து ராஜா (11), மகள் பவித்ரா (9) ஆகியோருடன் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து உடனே விரைந்து வந்த போலீஸார் தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த மூவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.