ஓடும் ரயிலில் பாய்ந்து முத்தம் கொடுத்த சிஆர்பிஎஃப் வீரர் - அலறிய பெண்..!
திருப்பத்துார் அருகே சென்று கொண்டிருந்த ரயிலில் சிஆர்எஃப் வீரர் ஒருவர் பெண் பயணிக்கு பாய்ந்து முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாய்ந்து முத்தம் கொடுத்த சிஆர்பிஎஃப் வீரர்
கர்நாடகாவில் இருந்து ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அந்த ரயிலின் முன்பதிவு பெட்டியில் பெங்களூரைச் சேர்ந்த 38 வயதான பெண் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். ரயில் திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை கடந்து காட்பாடியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த பெண் பயணியின் அருகில் பயணம் செய்த திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த 38 வயதாகும் சுரேஷ் அந்தப் பெண் மீது பாய்ந்து முத்தம் கொடுத்துள்ளார்.
கைது செய்து நடவடிக்கை
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அலறினார். இதையடுத்து ரயில் பெட்டியில் இருந்த சக பயணிகள் அந்த பெண்ணை மீட்டனர். டிக்கெட் பரிசோதகர் மூலம் சுரேஷை காட்பாடி ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவரிடம் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் சுரேஷ் மத்திய ரிசர்வ் போலீஸ் (சிஆர்பிஎஃப்) படையில் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.
இதையடுத்து பெண்ணுக்கு பாய்ந்து முத்தம் கொடுத்த சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.