பிரசாரத்தில் முன்னாள் துணை முதலமைச்சர் மண்டை உடைப்பு - கர்நாடகாவில் பரபரப்பு..!
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி நடந்த பிரச்சாரத்தில் முன்னாள் துணை முதலமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டசபை தேர்தல்
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன, இதற்கு மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 224 தொகுதிகளில் பாஜக மற்றும் 223 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
இதில் துமகூரு மாவட்டம் கொரட்டக்கெரே சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வரா போட்டியிடுகிறார்.
இவர் தற்போது தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அணில் குமார் போட்டியிடுகிறார்.
தாக்குதல் நடத்தினர்
இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளரான பரேமஸ்வரா பைரனஹள்ளி கிராமத்தில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார், அப்போது காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு மாலை அணிவிக்க முயன்றனர். அந்த சமயத்தில் அவர் மீது யாரோ கல் வீசியதாக கூறப்படுகிறது.
இதில் அவருக்கு மண்டை உடைந்து அவர் ரேத்த வெள்ளத்தில் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.