ஆன்லைனின் சிக்கன் ரோல் ஆர்டர் செய்த பெண்..கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி -வைரல் வீடியோ!
ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த சிக்கன் ரோலில் கத்தி இருந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆன்லைன் ஆர்டர்
இன்றைய டிஜிட்டல் உலகில் மக்களின் வாழ்க்கை முறை வெகுவாக மாறிவிட்டனர். குறிப்பாக உணவு முறைகள் காலத்திற்கேற்ப மாறத் தொடங்கிவிட்டனர்.அந்த வகையில், சமீப காலமாக உணவுகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வீட்டுக்கு வரவழைத்துச் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பெண் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த சிக்கன் ரோலில் கத்தி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எமிலி என்ற பெண் ஆன்லைன் மூலம் சிக்கன் ரோல் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.
கத்தி
சிறிது நேரம் கழித்து உணவு வீட்டுக்கு வந்துள்ளது. அப்போது ஆர்வமாக சிக்கன் ரோலை எடுத்துச் சாப்பிட்டுள்ளார். அப்போது, ஏதோ ஒரு கடினமான பொருள் பல்லில் கடிபடுவதை உணர்ந்தார்.பின்னர் சிக்கன் ரோலை எடுத்துப் பிரித்துப் பார்த்துள்ளார்.
அப்போது அதனுள்ளே ஆரஞ்சு கைப்பிடியுடன் கூடிய கத்தி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.இந்த சம்பவத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் பலரும் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பதிவிட்டு வருகின்றனர்.