கோமியத்தை விடுங்க..ஒரு பாட்டில் புலியின் சிறுநீர் 600 ரூபாய்க்கு விற்பனை -எங்கு தெரியுமா?
ஒரு பாட்டில் புலியின் சிறுநீர் 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
புலியின் சிறுநீர்
தமிழ்நாட்டில் அண்மையில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி நிகழ்ச்சியில் ஒன்றில் பேசும் போது பசுவின் கோமியத்தைக் குடித்தால் 15 நிமிடத்தில் ஜூரம் குணமாகிவிடும். மேலும் காய்ச்சல், வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்குக் கோமியம் சிறந்த மருந்து எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஒரு பாட்டில் புலியின் சிறுநீர் 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். சீனாவில் யான் பிஃபெங்சியா வனவிலங்கு உயிரியல் பூங்கா அமைந்துள்ளது.
இந்த பூங்காவில் சைபீரியன் புலியின் சிறுநீர் முடக்கு வாதம் மற்றும் பிற நோய்களுக்கு மருந்தாக உள்ளதாகக் கூறப்படுகிறது.மேலும் புலியின் சிறுநீரை விற்பனை செய்ய விளம்பரப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது. சைபீரியன் புலியின் சிறுநீர் 250 கிராம் திரவ பாட்டில்களை 50 யுவானுக்கு (இந்திய மதிப்பில் ரூ. 600) விற்பனை செய்யப்படுகிறது.
சீனா
இதனை வெள்ளை ஒயினுடன் கலந்து இஞ்சி துண்டுகளுடன் தடவும்போது சேர்த்து நல்ல பலன்களை அளிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கலவை சுளுக்கு, தசைகளில் வலி மற்றும் மூட்டுவலிக்குக் கூட பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
மேலும் இது குறித்து சீன மருத்துவர்கள் கூறுகையில்,’’புலி சிறுநீர் நிரூபிக்கப்பட்ட மருத்துவ மதிப்பைக் கொண்டிருக்கவில்லை மற்றும் பாரம்பரிய மருத்துவத்திலும் இது பயன்படுத்தப்படுவதில்லை என்று கூறியுள்ளது. இது தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.