பணியின்போது தூங்கிய போலீஸ் நாய்..அரசு எடுத்த வினோத நடவடிக்கை - அதிர்ச்சியில் மக்கள்!
காவல் துறையில் உள்ள நாய் ஒன்றுக்கு ஊக்கத்தொகை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
சீனா
உலகம் முழுவதும் உள்ள மக்களை பாதுகாக்கக் காவல்துறை முக்கிய அங்கமாக உள்ளது. அதன்படி, கொள்ளை, கொலை, திருட்டு சம்பவங்களுக்குக் காவலர்களுக்கு உதவியாக இருப்பது மோப்பநாய்கள் தான்.
உதாரணமாக ஒரு துளி இரத்தத்தை ஐந்து லிட்டர் தண்ணீரில் கலந்தாலும் அதன் வாசனையை அறியும் திறன் கொண்டது.அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வாசனையையும் தனித்தனியே பிரித்து நுகரும் சக்தியும் கொண்டுள்ளது.
இத்தகைய சிறப்பு மிக்க காவல்துறையில் பணியாற்றும் நாய் ஒன்றுக்கு வருடாந்திர ஊக்கத்தொகை ரத்து செய்யப்பட்டு உள்ளது.இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் வெயிஃபாங்கில் கடந்த 2023 ஆண்டு ஃபுசாய் என்ற நாய்க் குட்டி பிறந்தது.
மோப்ப நாய்
இதற்கு காவல்துறையினர் மோப்ப நாய் பயிற்சி அளித்தனர். அனைத்துப் பயிற்சிகளும் வெற்றி பெற்று தற்போது முழுநேரம் பணியாற்றும் மோப்ப நாய் அந்தஸ்து பிரிவில் பணிபுரிந்து வருகிறது.
இந்த நிலையில், தன் பணி நேரத்தின்போது தூங்கியதற்காகவும், தனது உணவுக் கிண்ணத்திலேயே சிறுநீர் கழித்ததற்காகவும் அதனுடைய வருடாந்திர ஊக்கத்தொகையைச் சீன அரசு ரத்து செய்துள்ளது. மேலும், அபராதமாக அதன் தின்பண்டங்களும் அகற்றப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.