ஆணுறுப்பை கடித்த பாம்பு; ரீல்ஸ் மோகத்தால் நடந்த விபரீதம் - அதிர்ச்சி வீடியோ
ரீல்ஸ் எடுக்கும் போது இளைஞரின் ஆணுறுப்பை பாம்பு கடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
ரீல்ஸ் மோகம்
சமூகவலைத்தளங்களில் பிரபலமாக ஆசைப்பட்டு பலரும் பல்வேறு சாகசங்களை செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இதில் சில உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்பட்டுள்ளது.
இதே போல் இளைஞர் ஒருவர் லைக்ஸ்க்கு ஆசைப்பட்டு ரீல்ஸ் மோகத்தில் செய்த செயல் விபரீதத்தில் முடிந்துள்ளது.
கடித்த பாம்பு
வங்கதேசத்தை சேர்ந்த Jejak Si Aden என்றயூடியூபர் ஒருவர் பாம்பை வைத்து சாகசங்கள் செய்து வீடியோ வெளியிடுபவர். சமீபத்தில் அதே போல் பாம்பை வைத்து சாகசம் செய்ய முயலும் போது பாம்பு எதிர்பாராத விதமாக அவரது ஆணுறுப்பை கடித்து விடுகிறது.
அந்த இளைஞர் பாம்பை அங்கிருந்து எடுக்க எவ்வளவோ முயற்சித்தும் பாம்பு அதன் பிடியை விடவில்லை, சிறுது நேரத்தில் அவர் முகமெல்லாம் வியர்க்க ஆரம்பித்து அப்படியே தரையில் சரிகிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதெல்லாம் தேவையா?, வீடியோவை பார்க்கும்போதே வலியை உணர்வதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.