கண்ணாமூச்சி விளையாட்டில் நடந்த விபரீதம் - காதலனை சூட்கேஸில் அடைத்து கொன்ற பெண்

United States of America Murder
By Karthikraja Dec 06, 2024 09:00 AM GMT
Report

சூட்கேஸில் அடைத்து காதலனை கொன்ற வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சூட்கேஸ் கொலை

புளோரிடாவைச் சேர்ந்த 47 வயதான சாரா பூன் என்பவருக்கு காதலரை சூட்கேஸில் அடைத்து கொன்ற குற்றத்திற்காக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

jorge torres sarah boone

புளோரிடாவைச் சேர்ந்த 47 வயதான சாரா பூன்(sarah boone) மற்றும் 42 வயதான ஜார்ஜ் டோரஸ்(jorge torres)காதலர்கள் ஆவார்கள். கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி சாரா பூன் தனது காதலர் ஜார்ஜ் டோரஸை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார்.

மனைவியை கொன்று விட்டு கூகிளில் தேடிய கணவர் - தட்டி தூக்கிய போலீஸ்

மனைவியை கொன்று விட்டு கூகிளில் தேடிய கணவர் - தட்டி தூக்கிய போலீஸ்

ஆயுள் தண்டனை

அவரிடம் நடத்திய விசாரணையில், "இருவரும் மது அருந்தி விட்டு கண்ணாமூச்சி ஆடினோம். அப்போது டோரஸை சூட்கேஸில் வைத்து ஜிப்பை மூடினேன். அவர் தானாக வெளியே வந்து விடுவார் என நினைத்து தூங்க சென்று விட்டேன். மறு நாள் எழுந்து பார்த்த போதுதான் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது" என தெரிவித்துள்ளார்.

jorge torres sarah boone suitcase

ஆனால் காவல்துறை தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் இருவருக்கும் வீட்டில் அடிக்கடி சண்டை நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த அன்று, சூட்கேஸ் உள்ள மூச்சு திணறுவதாகவும், காப்பாற்றுமாறும் டோரஸ் பலமுறை சாரா பூன் பெயரை சொல்லி அழைத்துள்ளார். 

sarah boone suitcase murder

"நீ என்னை ஏமாற்றிய போது எனக்கு இப்படிதான் இருந்தது" என சாரா தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஆதாரத்தை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். இந்த வழக்கு மீதான இறுதி விசாரணை டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெற்றது. இதில் சாரா பூனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.