மனைவியை கொன்று விட்டு கூகிளில் தேடிய கணவர் - தட்டி தூக்கிய போலீஸ்
கூகிள் செர்ச்சில் தேடியதை வைத்து கணவரை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவி மாயம்
நேபாளத்தை பூர்விமாக கொண்ட நரேஷ் பட்(37) மம்தா கஃப்லே பட்(28) தம்பதிக்கு ஒரு மகன் உண்டு. இவர்கள் அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் வசித்து வந்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் செவிலியராக பணியாற்றி வரும் தனது மனைவி மம்தா காணாமல் போய் விட்டார் என நரேஷ் பட் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
கூகிள் தேடல்
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அமெரிக்க காவல்துறையினர், நரேஷ் பட்டிடம் மனைவி காணாமல் போனது விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் நரேஷ் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்ததால் காவல்துறையினருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை கவனிக்கத் தொடங்கினர்.
விசாரணையில் கடந்த ஏப்ரல் மாதம், "மனைவி இறந்த பிறகு மறுமணம் செய்ய எவ்வளவு நாட்கள் ஆகும்", "மனைவி இறந்த பிறகு கடன் தள்ளுபடி செய்யப்படுமா?", "வர்ஜீனியாவில் மனைவி காணாமல் போனால் என்ன நடக்கும்" என வலைதளத்தில் தேடியது தெரிய வந்தது.
கைது
காணாமல் போனதாக சொல்லப்பட்ட இரு தினங்களுக்கு முன் உள்ளூர் கடையில் கத்தி, தரையை சுத்தம் செய்ய சில உபகரணங்களை வாங்கியது, குப்பை பைகளை அகற்றியது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதனையடுத்து நரேஷ் பட் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
மம்தாவின் உடல் கிடைக்காத நிலையில், கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தி இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.