50 வயது தாயை 20 வயது நண்பனுக்கு திருமணம் செய்துவைத்த மகன் - என்ன காரணம்?
மகன் தனது 50 வயது தாயை 20 வயது நண்பனுக்கு திருமணம் செய்துவைத்துள்ளார்.
மகன் ஆதரவு
சீனாவை சேர்ந்தவர் சிஸ்டர் ஜின்(50). இவர் தொழில் முனைவோராக உள்ளார். இவருக்கு திருமணமான நிலையில், கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இவர்களுக்கு கைகாய்(20) என்ற மகன் உள்ளார்.
இவருடன் ரஷ்யாவை சேர்ந்த டெஃபு என்பவர் படித்து வருகிறார். கைகாய் தனது நண்பர்கள் டெஃபு உட்பட 3 பேரை வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு ஜின் விருந்து வழங்கியுள்ளார். அப்போது ஜின் மற்றும் டெஃபு ஆகியோர் இடையே காதல் மலர்ந்துள்ளது.
தாய்க்கு திருமணம்
ஒரு வாரம் வரை அங்கேயே தங்கியுள்ளார். தொடர்ந்து இதனை அறிந்த கைகாய் இருவரது திருமணத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளார். அதன்படி திருமணம் செய்துக்கொண்டனர். பின் மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஜின் தான் கர்ப்பமாக உள்ளதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், ‛‛தனக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் 30 வயதில் கணவரை பிரிந்தேன்.
அதன்பிறகு மகனின் வகுப்பு தோழனும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இப்போது கர்ப்பமாக உள்ளேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.