'I love U' சொல்வது பாலியல் துன்புறுத்தல் அல்ல - நீதிமன்றம் சொல்வதென்ன?

Mumbai
By Sumathi Jul 02, 2025 07:56 AM GMT
Report

"ஐ லவ் யூ" என்று சொல்வது பாலியல் துன்புறுத்தலாகாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு தெரிவித்துள்ளது.

ஐ லவ் யூ

நாக்பூர் கட்டோலைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கு, 17 வயது சிறுமியின் கைகளை பிடித்து இழுத்து ’ஐ லவ் யூ’ சொன்னதற்காக பாலியல் துன்புறுத்தல் பிரிவின் கீழ் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த இளைஞர் ஜாமீனில் வெளியே வந்து வழக்கை தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றத்தின்

ஒரே மாதத்தில் 20 மாரடைப்பு மரணங்கள்; கோவிட் தடுப்பூசி காரணமா? அரசு விளக்கம்

ஒரே மாதத்தில் 20 மாரடைப்பு மரணங்கள்; கோவிட் தடுப்பூசி காரணமா? அரசு விளக்கம்

நீதிமன்ற தீர்ப்பு

நாக்பூர் அமர்வு நீதிபதி ஊர்மிளா ஜோஷி பால்கே அந்த இளைஞரை குற்றமற்றவர் என்று விடுவித்தார். தீர்ப்பின்போது பேசிய அவர், “குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் நோக்கத்துடன் சிறுமியைத் தொட்டதாக எந்தக் குற்றச்சாட்டும் இல்லாததால், போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்படவில்லை.

nagpur

மேலும் "ஒருவர் வேறொரு நபரைக் காதலிப்பதாகக் கூறினால் அல்லது தனது உணர்வுகளை வெளிப்படுத்தினால், அது பாலியல் நோக்கத்துடன் சொல்லப்படுவது கிடையாது.

ஐ லவ் யூ என்று வெளிப்படுத்தப்படும் வார்த்தைகள் உணர்வுகளின் வெளிப்பாடாக சொல்லப்படுவது மட்டுமே” என்றும் கூறியுள்ளார்.