சகோதரனை திருமணம் செய்த தங்கை; 2 குழந்தைகள் வேறு - அதிர்ச்சி காரணம்!

Marriage Relationship
By Sumathi Dec 12, 2023 10:22 AM GMT
Report

சகோதரர் முறை கொண்டவரை திருமணம் செய்துக்கொண்டதாக பெண் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

சகோதரனுடன் திருமணம் 

லிண்ட்சே என்ற பெண் தனது காதல் கதையை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் அதில், லிண்ட்சே அவரின் கணவர் கேட்டை 2007ல் சந்தித்துள்ளார்.

Lindsay and Cade

அப்போது அவர்களுக்கு வயது 14 மற்றும் 16 ஆக இருந்தது. ஒருநாள் இருவரும் அறையில் இருப்பதை பார்த்த லிண்ட்சேவின் தாய், கேட்டின் அப்பாவை சந்தித்து பேசி இருவரையும் பிரித்து வைத்துள்ளார். தொடர்ந்து சுமார் 6 வருடங்கள் இருவரும் சந்திக்காத நிலையில்,

2 காதலிகளும் கர்ப்பம் - குழந்தை பெற்ற பின் திருமணம் செய்த இளைஞர்!

2 காதலிகளும் கர்ப்பம் - குழந்தை பெற்ற பின் திருமணம் செய்த இளைஞர்!

அதிர்ச்சி காரணம் 

ஒரு நாள் கேட் ஃபேஸ்புக் மூலமாக லிண்ட்சேவிற்கு மெசேஜ் அனுப்பினார். அதன்பின் இருவரும் காதலில் விழுந்துள்ளனர். ஆனால் இருவரின் காதலை அவர்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில், லிண்ட்சேவிற்கு விமானப்படையில் வேலை கிடைக்க, அவர் கேட்டை விட்டு தூரமாக சென்று விட்டார்.

viral post

பின்னர், 1 வருடங்களில் ஏற்பட்ட திருப்பங்களினால் கேட் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதுதான் இருவரின் காதல் அதிகரித்துள்ளது. கேட் சிறையில் இருந்து வெளியில் வந்ததும், இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையில், இவர்களை பிரிப்பதற்காக சந்தித்து பேசிக்கொண்ட பெற்றோர் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு திருமணம் செய்துள்ளனர். அந்த வகையில், லிண்ட்சேவின் கணவர் அவருக்கு சகோதரர் முறைக்கு வருகிறார். உறவு முறையில் குழப்பங்கள் இருப்பினும், அது அவர்களை பாதிக்கவில்லை. மகிழ்ச்சியாக வாழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.