கசந்த கணவர், 2 மகன்கள் - தன்னை விட 24 வயது இளைய நபருடன் சென்ற தாய்!
பெண் ஒருவர் 24 வயது இளைய நபரை கரம் பிடித்துள்ளார்.
கசந்த காதல்
பிரிட்டன், எசெக்ஸ் பகுதியைச் சேர்ந்த பெண் ஆன் ஜான்சன்(53). இவருக்கு 24 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்த பெண்ணுக்கு பால்(30) என்ற நபருடன் ஆன்லைனில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பாலுக்கு ஒரு காதலி இருந்துள்ளார். இவருக்கும் உறவு மூலம் ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு 2 வயது இருக்கும் போது இருவரும் பிரேக் அப் செய்துள்ளனர்.
கணவனை பிரிந்த பெண்
இவரும் அடிக்கடி சந்தித்து பேசிவந்த நிலையில், 2014ஆம் ஆண்டு ரிலேஷன்ஷிப்க்குள் செல்ல முடிவெடுத்தனர். தனது கணவரிடம் இதை நேரடியாக தெரிவிக்க முடியாமல், ஆன் ஒரு கடிதத்தை எழுதி வைத்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
மேலும், இதனை தனது மகன்களிடம் தெரிவித்துள்ளார். மூத்த மகன் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார். இளைய மகன் அவரை பார்க்க விருப்பமில்லாமல், போன் செய்தாலும் பதிலளிக்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், கணவரை விவாகரத்து செய்த ஆன், 2015ஆண்டு ஆண்டு பால் உடன் திருமணம் செய்துள்ளார். அன்று தொடங்கி தற்போது வரை தான் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும், பால் தன்னைவிட 24 வயது இளையவர் என்றாலும் வயது வித்தியாசம் ஒரு தடை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.