மகளின் காதலனுடன் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு கணவனை கொலை செய்த மனைவி!
மகளின் காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்எல்சி ஊழியர்
நெய்வேலி, என்எல்சி நிறுவன தொழிலாளியாக பணி புரிபவர் சண்முகம் (54) மனைவி ஷகிலா(48). இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் என என்எல்சி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
இதில் ஒரு மகள் திருமணம் முடிந்த நிலையில், இரண்டாவது மகள் மற்றும் மகன் வெளியூரில் தங்கி படித்து வருகின்றனர். இதனிடையே சண்முகம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
தகாத உறவு
இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக நாளுக்கு நாள் சண்டை அதிகரித்ததால், ஆத்திரம் அடைந்த ஷகிலா கணவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் தனது இளைய மகள் நெய்வேலியைச் சேர்ந்த தமிழ் வளவன் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். அவரிடம் எனது இரண்டாவது மகளை உனக்கு திருமணம் செய்து கொடுக்கிறேன்.
மகளின் காதலன்
என்னுடைய கணவர் உயிரிழந்துவிட்டால் என்எல்சியில் இருந்து பணம் வரும். அதையும் கொடுத்து விடுகிறேன் என கூறி ஷகிலா மகளின் காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். பின்னர் இருவரும் இணைந்து சண்முகத்தை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
தொடர்ந்து வீட்டின் பின்பக்கமாக இருவரும் சென்று கதவை பூட்டிவிட்டு, தமிழ் வளவன் மட்டும் அங்கிருந்து தப்பித்த நிலையில் ஷகிலா வீட்டிற்கு வெளியே நின்றுள்ள அவரது காரில் உறங்கியிருக்கிறார்.
கணவன் கொலை
இதனையடுத்து காலையில் எழுந்து வீட்டைத் தட்டியும் திறக்கவில்லை எனக் கூறி, அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது சண்முகம் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஷகிலாவிடன் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கணவனை தானே கொன்றதாக ஒப்புக்கொண்டு, காரணத்தையும் கூறியுள்ளார்.
இதனையடுத்து ஷகிலா மற்றும் தமிழ் வளவன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.