6 பேரை திருமணம் செய்து முதலிரவு முடிந்ததும் மாயமாகும் பெண் - 7வது மாப்பிள்ளை கொடுத்த ஷாக்!

Uttar Pradesh Marriage Crime
By Sumathi Dec 27, 2024 03:00 PM GMT
Report

பெண் ஒருவர் 6 பேரை திருமணம் செய்து மோசடி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

 6 திருமணம்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் பூனம். அங்கு மணமகளாக சுற்றி வருகிறார். இவருக்கு தாயாக சஞ்சனா குப்தா என்பவர் நடித்து வருகிறார்.

பூனம்

பூனத்திற்கு விமலேஷ் வர்மா மற்றும் தர்மேந்திர பிரஜாபதி ஆகிய இரண்டு தரகர்கள் மாப்பிள்ளை பார்ப்பார்கள். தொடர்ந்து மாப்பிள்ளையிடம் பணம் கேட்டு வாங்கி கொள்வார்கள். பின் பூனத்தையும் திருமணம் செய்து வைப்பார்கள்.

மணமகன் வீட்டில் இருந்து பூனம் அடுத்த சில நாளிலேயே பணம், நகையை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிடுவார். இதைதான் வாடிக்கையாக வைத்துள்ளார்.

திருமணத்திற்கு முன்பே உல்லாசத்திற்கு அழைத்த மணமகன் - கடைசியில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

திருமணத்திற்கு முன்பே உல்லாசத்திற்கு அழைத்த மணமகன் - கடைசியில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அம்பலமான மோசடி

இந்நிலையில், பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் உபாத்யா என்பவர் தனக்கு பெண் தேடியுள்ளார். உடனே, விமலேஷ் வர்மா, பூனம் புகைப்படத்தை காண்பித்து, இந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்றால் ஒன்றரை லட்சம் செலவு செய்ய வேண்டியதிருக்கும் என்று கூறியுள்ளார்.

6 பேரை திருமணம் செய்து முதலிரவு முடிந்ததும் மாயமாகும் பெண் - 7வது மாப்பிள்ளை கொடுத்த ஷாக்! | Woman Married 6 Men And Cheated Up

அதற்கு சம்மதித்த சங்கர் பெண் மற்றும் அவரது தாயை சந்தித்துள்ளார். ஆனால் பணம் கேட்டதில் சந்தேகமடைந்த சங்கர் அவர்களின் ஆதார் கார்டு உள்பட அனைத்து விவரங்களையும் கேட்டுள்ளார். இதனை தராததால் திருமணத்திற்கு சங்கர் மறுத்துள்ளார்.

எனவே ஆத்திரமடைந்த கும்பல் சங்கரை பெண்ணை ஏமாற்றியதாக பொய் வழக்கில் சிக்க வைப்போம் என்று மிரட்டியுள்ளனர். உடனே, சங்கர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் நடத்திய விசாரணையில்,

பூனம் இதுவரை 6 பேரை திருமணம் செய்து பணம், நகையை திருடியதும், ஏழவாதாக சங்கரை ஏமாற்ற முயன்ற போது மாட்டிக்கொண்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மணப்பெண் பூனம், சஞ்சனா, விமலேஷ் வர்மா மற்றும் தர்மேந்திர பிரஜாபதி ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.