பிரசவத்தில் பயங்கரம் - குழந்தை பிறந்த 2 நாளில் தாய்க்கு பறிபோன கை, கால்கள்

Pregnancy United States of America
By Sumathi Feb 28, 2023 07:57 AM GMT
Report

பிரசவத்தின் போது ஏற்பட்ட நோய்த் தொற்றால் பெண் தன் கை, கால்களை இழந்துள்ளார்.

பிரசவம் 

அமெரிக்காவைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா பச்சேகோ(28). இவர் கர்ப்பமாக இருந்த நிலையில், பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் டெக்சாஸில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து வீடு திரும்பியுள்ளார்.

பிரசவத்தில் பயங்கரம் - குழந்தை பிறந்த 2 நாளில் தாய்க்கு பறிபோன கை, கால்கள் | Woman Lost Hands And Feet Due To Delivery America

அதன்பின் 2 நாளில் அவருக்கு காய்ச்சல், மூச்சுத் திணறல், வாந்தி ஏற்பட்டுள்ளது. இது தீவிரமானதால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சிகிச்சை அளித்தும் உடல்நிலை தேறவில்லை. அதனையடுத்து நவீன வசதி கொண்ட மருத்துவமனைக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.

செப்டிக் ஷாக் 

அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு செப்டிக் ஷாக் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நோய்த் தொற்றுக்கு உடல் அதீதமாக எதிர்வினையாற்றும். அதில் அவரது உயிர் காப்பாற்றப்பட்டாலும் கூட அவரது கைகள் மற்றும் கால்களில் ரத்த ஓட்டம் மோசமடைந்தது.

பிரசவத்தில் பயங்கரம் - குழந்தை பிறந்த 2 நாளில் தாய்க்கு பறிபோன கை, கால்கள் | Woman Lost Hands And Feet Due To Delivery America

அதனால் கைகள் மற்றும் கால்கள் இரண்டையும் துண்டிக்க அறுவை சிகிச்சை நடந்துள்ளது. மேலும், 10க்கும் மேற்பட்ட தோல் சார்ந்த ஆப்ரேஷன்களை செய்துள்ளனர். இதுகுறித்து அந்தப் பெண் கூறுகையில், "அப்போது எனக்கு என்ன நடந்தது என்பது தெளிவாக ஞாபகம் இருக்கிறது. என்னால் மூச்சுவிட முடியவில்லை.

கை,கால் இழப்பு

என்னால் பார்க்கக் கூட முடியவில்லை. எனக்கு மெல்ல மயக்கம் வரத் தொடங்கியது. எனது கணவர் பதறிவிட்டார். விட்டுவிடாதே.. நமது குழந்தைகளுக்கு நீ தேவை என்றெல்லாம் அவர் சொன்னார். அதெல்லாம் என்னால் கேட்க முடிந்தது. எனது கை, கால்கள் கறுப்பு நிறத்தில் மாறிவிட்டது.

கை, கால்கள் உறைந்து கிடந்தன” எனத் தெரிவித்துள்ளார். அதனையடுத்து 4 மாதங்களுக்குப்பின் தற்போது வீடு திரும்பி தனது 2 வயது மகனையும் மகளையும் கவனித்து வருகிறார்.