2 கணவர்களுடன் ஒரே வீட்டில்.. ஒன்னாவே சாப்பிட்டு தூங்குவாங்க; மனைவி நெகிழ்ச்சி!
2 கணவர்களுடன் வாழும் பெண் குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
2 கணவன்கள்
உத்தர பிரதேசம், தியோரியாவைச் சேர்ந்த பெண் ஒருவரில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அந்தப் பெண் அலங்காரம் செய்து மணப்பெண் போல காட்சியளிக்கிறார்.
கழுத்தில் இரு தாலிகள் அணிந்துள்ளார். இரு ஆண்கள் தோள் மீது கை போட்டு போஸ் கொடுத்துள்ளதாக காட்சி இடம்பெற்றுளது. இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறார்களாம். இருவரும் பெண்ணின் கணவர்கள்.
பெண் பெருமிதம்
மேலும் 2 பேருமே சகோதரர்கள் என்கிறார்கள். இதுகுறித்து அந்தப்பெண் கூறுகையில், இது என்னுடைய 2 தாலிகள். என்னுடைய 2 கணவர்களுக்காகவும் இந்த தாலிகளை அணிந்துள்ளேன். நாங்கள் மூவரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்கிறோம்.
நாங்கள் எங்கே சென்றாலும் மூன்று பேருமே ஒன்றாகத்தான் செல்வோம். ஒன்றாக தான் சாப்பிடுவோம். 3 பேருமே ஒன்றாக சேர்ந்துதான் தூங்குவோம். என்னுடைய 2 கணவர்களுடனும் நேரத்தை திறம்பட நிர்வகிக்கிறேன்.
எங்களுக்குள் அன்பாகவும், ஒற்றுமையாகவும் இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.