மாத சம்பளம் ரூ.13,000; ஆனால் காதலிக்கு bmw கார்.. 4bhk வீடு பரிசு - சிக்கிய அரசு ஊழியர்!

Government Employee India Maharashtra Crime
By Swetha Dec 27, 2024 03:30 PM GMT
Report

அரசு ஊழியர் காதலிக்கு கார் பங்களா என்று வாங்கி கொடுத்து மோசடி செய்தது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

அரசு ஊழியர்

 மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சத்ரபதி சம்பாஜி நகரில் விளையாட்டு வளாகம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் அரசின் சார்பில் ஒப்பந்த தொழிலாளியாக ஹர்ஷ் குமார் ஷீர்சாகர் என்பவர் அந்த அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணியாற்றி வருகிறார்.

மாத சம்பளம் ரூ.13,000; ஆனால் காதலிக்கு bmw கார்.. 4bhk வீடு பரிசு - சிக்கிய அரசு ஊழியர்! | Man With Rs 13000 Salary Buys Luxury Car And House

அவருக்கு மாதம் 13,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் வருமானத்துக்கு மீறி பி.எம்.டபிள்யூ கார் வாங்கி, அதில் வலம் வரத் தொடங்கியுள்ளார். மேலும் 4 பி.எச்.கே வீடு ஒன்றை, காதலிக்குப் பரிசாக அளித்திருக்கிறார்.

இதையெல்லாம் பார்த்த சக பணியாளர்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர். அதுமட்டுமின்றி தனது வசதியை மேலும்மேலும் பெருக்கியபடியே இருந்துள்ளார். இந்த சூழலில் ஷீர்சாகருடன் பணியாற்றி வந்த பணியாளரின் கணவரும் ரூ.35 லட்சம் மதிப்பிலான சொகுசு ரக கார் ஒன்றை சமீபத்தில் வாங்கியுள்ளார்.

இதனால் சந்தேகம் எழவே சக பணியாளர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், சக பணியாளருடன் சேர்ந்து ரூ.21 கோடி அளவுக்கு அரசு நிதியை மோசடி செய்தது,அதில் கிடைத்த தொகையை வைத்து சாகர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் - அகவிலைப்படியை உயர்த்திய தமிழக அரசு

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் - அகவிலைப்படியை உயர்த்திய தமிழக அரசு

 வீடு பரிசு

இந்த விளையாட்டு வளாகத்தின் பழைய லெட்டர்ஹெட்டைப் பயன்படுத்தி வங்கிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். விளையாட்டு வளாகத்தின் கணக்குடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை மாற்றுமாறு அதில் கோரியுள்ளார்.

மாத சம்பளம் ரூ.13,000; ஆனால் காதலிக்கு bmw கார்.. 4bhk வீடு பரிசு - சிக்கிய அரசு ஊழியர்! | Man With Rs 13000 Salary Buys Luxury Car And House

பின்னர் வளாகத்தின் கணக்கைப் போன்ற முகவரியுடன் புதிய மின்னஞ்சல் கணக்கை அவர் திறந்துள்ளார். அந்த மின்னஞ்சல் முகவரி இப்போது விளையாட்டு வளாகத்தின் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. அதைவைத்து, ஹர்ஷல் வங்கிப் பரிவர்த்தனையை மேற்கொண்டிருக்கிறார்.

அந்த வகையில்,நடப்பாண்டு ஜூலை மாதம் தொடங்கி டிசம்பர் வரை 13 வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.21.6 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதை வைத்து தான் ரூ.1.2 கோடி பிஎம்டபிள்யூ காரும், ரூ.1.3 கோடி மதிப்புள்ள எஸ்யூவியும்,

ரூ.32 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ பைக்கும் வாங்க பயன்படுத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மோசடியில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கப்படுகின்றனர். ஹர்ஷலை கைது செய்வதற்காக போலீஸார் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.