அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் - அகவிலைப்படியை உயர்த்திய தமிழக அரசு
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
அகவிலைப்படி
2016 ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 9% உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9 சதவீதம் உயர்த்தி கடந்த 1.1.2024 முதல் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி வீதம் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலை ஊதியத்தில் 239 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஜனவரி
இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி, ஜனவரி பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மே மாதங்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை, நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை, முறையான மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.