ரயிலில் உயிரோடு எரிந்த பெண் - கொளுத்திவிட்டு ரசித்த இளைஞர்!
ரயிலில் பெண்ணை, இளைஞர் கொளுத்திவிட்டு ரசித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பகீர் செயல்
நியூயார்க், புரூக்ளினில், கோனி ஐலேண்ட்- ஸ்டில்வேல் அவென்யூ ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்திற்கு காலை 7.30 மணியளவில் ரயில் ஒன்று வந்து நின்றுள்ளது.
அதன் கடைசி பெட்டியில் பெண் ஒருவர் போர்வையை போர்த்தியபடி அமர்ந்திருந்துள்ளார். தொடர்ந்து ர். அங்கு வந்த மர்மநபர் ஒருவர் அவர் அருகில் அமர்ந்துள்ளார். அந்த பெண்ணையே கவனித்துக் கொண்டிருந்த அவர், திடீரென தனது பாக்கெட்டிலிருந்து லைட்டரை எடுத்து அந்த போர்வையில் பற்ற வைத்துள்ளார்.
கொடூரக் காட்சிகள்
உடனே, அந்த பெண்ணின் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில், அலறியபடி ரயில் பெட்டிக்குள்ளேயே நின்றுள்ளார். இதனையடுத்து பெட்டியிலிருந்து வெளியே வந்த அந்த மர்மநபர் இந்த காட்சிகள் அனைத்தையும் அங்கிருந்த பிளாட்பாரத்தில் சேரில் அமர்ந்து நிதானமாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.
சம்பவம் குறித்து அறிந்து விரைந்த போலீஸார் அந்த பெண் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்கிடையில் அந்த பெண் உயிரிழந்துவிட்டார். தப்ப முயன்ற நபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில் அந்த பெண்ணுக்கும்,
மர்மநபருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அந்த நபர் கௌதமாலாவிலிருந்து 2018ல் அரிசோனா வழியாக அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.