தரையில் மோதி வெடித்து சிதறிய விமானம் - 72 பயணிகளின் நிலை என்ன?
72 பேருடன் பயணித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமான விபத்து
அஜர்பைஜான் ஏர்லைன்ஸின்(azerbaijan airlines) பயணிகள் விமானம் ஒன்று அஜர்பைஜான் தலைநகர் பாஹுவில் இருந்து ரஷ்யாவின் செச்சினியாவில் உள்ள க்ர்சோனிக்கு சென்று கொண்டிருந்தது.
பனி மூட்டம் காரணமாக இந்த விமானம், க்ர்சோனிக்கு விமானம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. கஜகஸ்தானின்( Kazakhstan) அக்டாவ் நகருக்கு அருகே வானில் வட்டமடித்து கொண்டிருந்த விமானம் திடீரென தரையில் மோதி வெடித்து சிதறியது.
72 பயணிகள்
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர் விமானத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்துள்ளனர். இந்த விமானத்தில் 67 பயணிகள் மற்றும் விமான குழுவை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 72 பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. சிலர் உயிர்பிழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் 46 உயிர் இழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.