தகாத உறவு: காதலனுக்காக 2 குழந்தைகளை கொன்று கால்வாயில் வீசிய கொடூர தாய்!
கள்ளக் காதலனுக்காக இரு குழந்தைகளை தாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
உத்தரப் பிரதேசம், டெல்லி கேட் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஷாஹித். இவரது மனைவி நிஷா. இவர்களுக்கு மிராப் என்ற 10 வயது மகனும், கைனன் என்ற 6 வயது மகளும் இருந்தனர். இந்நிலையில், குழந்தைகளை காணவில்லை என தாய் புகாரளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் விசாரித்ததில் நிஷாவுக்கும் அப்பகுதியின் உள்ளூர் கவுன்சிலரான சவுத் பவுஜி என்பவருக்கும் 4 ஆண்டுகளாக தகாத உறவு இருந்துள்ளது. சவுத் மணைவியை பிரிந்து வாழ்ந்துள்ளார்.
குழந்தைகள் கொலை
நிஷாவும் தனது கணவரை பிரிந்து விடுவதாக கூறிய நிலையில், குழந்தைகளை விட்டுவிட்டு வரும்படி கூறியுள்ளார். அதனால், நிஷா குழந்தைகள் இருவரையும் கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர். இதற்கு பக்கத்து வீட்டுகாரர்கள் நான்கு பேரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
குழந்தைகளுக்கு மயக்க ஊசி போட்டு மயக்கமடைய வைத்து, பின்னர் கழுத்தை நெறித்து கொலை செய்து சடலங்களை ஒரு பெட்டியில் அடைத்துள்ளனர்.
பின்னர் கார் மூலம் அதை தூக்கிச் சென்று கங்கை கால்வாயில் வீசியுள்ளது தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்துள்ளனர்.