தகாத உறவுக்கு தொல்லை.. குழந்தைக்கு விஷம் வைத்து கொன்ற கொடூர தாய்!
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் விஷம் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
கிருஷ்ணகிரி, போடம்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ் ( 27). கூலித் தொழிலாளி. இவருக்கும் ஞானமலர்(21) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிரபாஷ் (2½) என்ற மகனும், ஆதிரா என்கிற 9 மாத பெண் குழந்தையும் இருந்தனர்.
மாதேஷ் தினமும் வேலைக்காக வெளியே சென்று விடுவார். மனைவி தனது குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் ஞானமலருக்கும், அதே ஊரை சேர்ந்த தங்கராஜ் (28) என்ற விவசாயிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தாய் கொடூரம்
இதுகுறித்து அறிந்த மாதேஷ், மனைவியை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி, தனது தங்கராஜிடம் நடந்தது குறித்து தெரிவித்தார். மேலும் தனது குழந்தைகள் இருப்பதால் தன்னால் கள்ளக்காதலை தொடர முடியாது. எனவே அவர்களை கொலைசெய்து விடலாம் என ஞானமலர் கூறியுள்ளார்.
இதையடுத்து தங்கராஜ் கூறியபடி, ஞானமலர் குழந்தைகள் பிரபாஷ், ஆதிரா ஆகிய 2 பேருக்கும் எலிபேஸ்டை கொடுத்துள்ளார். மேலும் தானும் விஷம் குடித்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி 9 மாத பெண் குழந்தை ஆதிரா பரிதாபமாக உயிரிழந்தது. மருத்துவர்கள் ஞானமலரை பரிசோதனை செய்ததில் அவர் எலிபேஸ்ட் சாப்பிடவில்லை ஆனால் நாடகமாடியது தெரியவந்தது. அதனையடுத்து தாயையும், கள்ளக்காதலரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.