கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தை தீர்த்துக்கட்டிய தாய்!
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் மேலவாஞ்சூரைச் சேர்ந்தவர் கார்த்திக் அரவிந்த். இவருக்கும் அபர்ணா என்பவருக்கும் திருமணம் ஆகி 4 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட மனைவியை பிரிந்த கார்த்திக் அரவிந்த் சென்னையில் தனியாக வசித்து வந்துள்ளார்.அதேசமயம் நாகையில் குழந்தையுடன் அபர்ணா வசித்து வந்துள்ளார்.
இதுகுறித்த விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து அபர்ணாவும் அவரது கள்ளக்காதலன் சுரேஷும் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அப்போது அபர்ணாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சுரேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் தனியாக வீடு
எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.இந்நிலையில் குழந்தை கவித்ரன் இறந்து விட்டதாக சென்னையில் உள்ள தந்தை கார்த்திக் அரவிந்துக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் நாகை சென்ற அவர்
தனது குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார். குழந்தையின் உடலை உடற்கூறாய்வு செய்து அனுப்பியபோது குழந்தை கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.