தகாத உறவு: வற்புறுத்திய பெண்னை கொன்று வீசிய கொடூரம் - செருப்பால் சிக்கிய வாலிபர்கள்!
பெண் கழுத்தை நெறித்து, 2 இளைஞர்கள் ஆற்றில் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
மும்பை, தாம்னி கிராமத்தில் காதி ஆற்றில் பெண் ஒருவரின் உடல் கண்டறியப்பட்டது. அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ததில், பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்து வீசப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டது.
அதில் இறந்த பெண்னின் காலில் அணிந்திருந்த செருப்பில் கடை ஒன்றின் பெயர் இருந்தது. அதனை வைத்து ஒவ்வொரு கிளைகளிலும் பெண்ணின் புகைப்படத்தை வைத்து விசாரித்ததில் அவருடன் ஒரு நபர் வந்திருந்ததும் தெரியவந்தது. பெண்ணின் பெயர் ஊர்வசி(27). அவர் வேலை செய்த இடத்திற்குச் சென்று விசாரித்ததில் அவர் வேலைக்கு வரவில்லை.
இளம்பெண் கொலை
அவருடன் இருந்த நபர் ரியாஸ் கான் என்று அடையாளம் காணப்பட்டது. தேவ்னார் பகுதியைச் சேர்ந்த அந்த நபர் ஜிம் பயிற்சியாளராக இருக்கிறார். அவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில், புதிதாக பீர் பார் வந்தபோது ரியாஸ் கானுக்கு, ஊர்வசியுடன் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டது.
இதனால் அந்தப் பெண் தன்னை திருமணம் செய்யும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால் இதற்கு மறுத்துள்ளார் ரியாஸ். தொடர்ந்து ஊர்வசி போலீஸில் புகார் செய்வேன் என மிரட்டியுள்ளார். இதனால் அவர் ஊர்வசியை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். தனது நண்பரான இம்ரான் என்பவருடன் இணைந்து ஸ்கெட்ச் போட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, ஊர்வசியை, ரியாஸ் ன் காரில் அழைத்துக்கொண்டு ஷில்பாடா நோக்கிச் சென்றார். காரில் செல்லும் வழியிலேயே இம்ரான் ஏறியுள்ளார். அதன்பின் ஊர்வசியைக் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலைசெய்திருக்கின்றனர். பின்னர் உடலை ஆற்றில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். அதன் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.