காதலனுடன் நெருக்கம்; கணவன், 22 வயது மகளை கொன்று தாய் வெறிச்செயல்!
கள்ளகாதலுக்காக, பெண் தனது கணவன் மற்றும் மகளை கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
தகாத உறவு
தெலங்கானா, ஒடிதலா கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி(58). இவரது முதல் மனைவி இறந்த நிலையில், தடிசர்லாவை சேர்ந்த கவிதா என்பவரை 2வதாக திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு வர்ஷினி, ஹன்சிகா என 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் ஹன்சிகாவுக்கு திருமணமாகி வெளியூரில் கணவருடன் வசித்து வருகிறார். மூத்த மகள் பெற்றோருடன் வசித்து வந்தார்.
குமாரசாமிக்கு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கினார். இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த திருமணமாகாத ராஜ்குமார் என்பவருடன் கவிதாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த கணவர், மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால் மகள் இல்லாத போது ராஜ்குமாரை வீட்டிற்கு வரவழைத்தார்.கவிதா கணவரின் கால் களை பிடித்துக் கொண்டார் ராஜ்குமார் குமாரசாமியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் கணவர் உடல்நலகுறைவால் இறந்து விட்டதாக நாடகமாடினார்.
தாய் வெறிச்செயல்
இதனையடுத்து குமாரசாமி உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கேள்வி கேட்ட மகளையும், கவிதா தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின், முள்புதரில் பிணத்தை வீசினர்.
மகள் காணாமல் போனதாக போலீஸில் புகாரளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், ராஜ்குமார் முள்புதரில் இருந்த வர்ஷினியின் பிணத்தை மீண்டும் மூட்டை கட்டினார்.
பின்னர் பிணத்தை தனது பைக்கில் வைத்து கட்டாரம் தேசிய நெடுஞ்சாலைக்கு எடுத்துச் சென்றார். சாலையோரம் வர்ஷினியின் சடலத்தை வைத்து அதன் மீது மஞ்சள் குங்குமம் உடலை சுற்றியிலும் பூக்களை தூவினார்.
ஆணிகளை அடித்து அமானுஷ்ய சடங்கு செய்து வர்ஷினியை யாரோ கொலை செய்ததாக சித்தரிக்க முயன்றனர். மேலும் அங்கு ஆதார் அட்டையை வீசிவிட்டு வந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆதார் அட்டை அடையாளத்தை வைத்து கவிதாவுக்கு போன் செய்து வரவழைத்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற கவிதா யாரோ தனது மகளை கொலை செய்து விட்டதாக நாடகமாடினார். தொடர் தீவிர விசாரணையில் கவிதா தனது கள்ளக்காதலன் ராஜ்குமார் உடன் சேர்ந்து கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் மற்றும் மகளை கொலை செய்ததை விசாரணையில் ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.