17 வயது பள்ளி மாணவனுடன் 27 வயது இளம்பெண் ஓட்டம் - லாட்ஜில் சிக்கிய கொடுமை
பிளஸ் 1 மாணவனுடன் ஓட்டம் பிடித்த, 27 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாயமான ஜோடி
கேரளா, சேர்த்தலா பள்ளிபுரத்தை சேர்ந்தவர் சனுஷா (27). சில மாதங்களுக்கு முன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.
அப்போது குத்தியதோடு பகுதியை சேர்ந்த துாரத்து உறவினரான பிளஸ் 1 படிக்கும், 17 வயது சிறுவனுடன் சந்திப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் மொபைல் போனில் பேசி, பழகி வந்துள்ளனர்.
பெண் கைது
இந்நிலையில் திடீரென இருவரும் வீட்டில் இருந்து மாயமாகினர். பின் சிறுவனின் பெற்றோர், இளம் பெண்ணின் பெற்றோர் தனித்தனியாக போலீசில் புகார் அளித்தனர். அதன்படி விசாரணை நடத்திய நிலையில், உறவினர் ஒருவருடன் சிறுவன், வாட்ஸ் அப்பில் பேசியுள்ளார்.
அதன்மூலம் அவர்கள் கர்நாடகா, கொல்லுாரில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று, லாட்ஜில் தங்கி இருந்த இருவரையும் மீட்டு அழைத்து வந்தனர்.
சனுஷா மீது போலீசார் போக்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.