சிறுவனால் கர்ப்பமான மாணவி - கருக்கலைப்பு செய்ததால் பறிபோன உயிர்!
கருக்கலைப்பால் 17 வயது சிறுமி உயிரிழந்தார்.
கருக்கலைப்பு
திருவள்ளூர், பள்ளிப்பட்டு வட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 17 வயது மகள் நர்சிங் படித்து வந்தார்.
இவரும், உறவினரான 17 வயது சிறுவனும் வீட்டை விட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியேறினர். தொடர்ந்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில்,
போலீசார் 17 வயது சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இருவரையும் சிறுவன் வீட்டார் கண்டுபிடித்த நிலையில், 5 மாத கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு பண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ததாகக் கூறப்படுகிறது.
சிறுமி பலி
பின் சொந்த ஊர் அழைத்துவரப்பட்ட சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த செவிலியர் வயலட் கனி, ஹரிபாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சிறுவனையும், அவரது பெற்றோரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.