திருமணத்திற்கு 1 மணி நேரம்தான்.. மணப்பெண்ணை துடிக்க துடிக்க கொன்ற மாப்பிள்ளை!

Attempted Murder Gujarat Marriage Crime
By Sumathi Nov 17, 2025 06:03 PM GMT
Report

மணப்பெண்ணை, வருங்கால கணவன் அடித்தே கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருமண  விவகாரம்

குஜராத், பாவ் நகரை சேர்ந்தவர் சோனி ராதோடு(24). இவரும் சஜன் பாரையா என்பவரும் காதலித்து லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர்.

சோனி - சஜன்

பின், இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து குடும்பத்தினரிடம் சம்மதம் வாங்கியுள்ளனர். தொடர்ந்து, நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதன்படி, சஜன் தனது குடும்பத்தினர்,

உறவினர்களுடன் மணப்பெண் சோனியின் வீட்டுக்கு வந்தார். அப்போது திருமணத்துக்கு மணமகன் சஜன் குடும்பத்தினர் எடுத்து வந்த சேலை மற்றும் சில செலவுகள் தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

17 வயது சிறுவனுடன் 33 வயது தாய் - நேரில் பார்த்த மகளுக்கு நேர்ந்த கொடூரம்!

17 வயது சிறுவனுடன் 33 வயது தாய் - நேரில் பார்த்த மகளுக்கு நேர்ந்த கொடூரம்!

மாப்பிள்ளை வெறிச்செயல்

திடீரென வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சஜன், அருகே இருந்த இரும்பு குழாயை எடுத்து ஓங்கி சோனியின் தலையில் அடித்தார்.மேலும், சோனியின் தலையை பிடித்து சுவற்றில் முட்டினார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

திருமணத்திற்கு 1 மணி நேரம்தான்.. மணப்பெண்ணை துடிக்க துடிக்க கொன்ற மாப்பிள்ளை! | Woman Killed By Fiance On Wedding Day Gujarat

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையில் சஜன் அங்கிருந்து ஓடிவிட்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சஜனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.