தெருநாய் மீது பாசத்தை கொட்டிய மனைவி - விரக்தியில் கணவர் எடுத்த முடிவு!
தன்னை கவனிக்கத் தவறியதாகக் கூறி கணவர், மனைவியிடம் ஒருவர் விவாகரத்து கோரியுள்ளார்.
தெருநாய் பாசம்
குஜராத்தைச் சேர்ந்த தம்பதி, திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, மனைவி ஒரு தெருநாயை வீட்டிற்கு அழைத்து வந்து வளர்க்க ஆரம்பித்தார்.

அவர் வசித்து வந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் அக்கம் பக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தபோதும் அதைக் கண்டுகொள்ளவில்லை. அவர் தொடர்ந்து தெருவில் திரியும் பல நாய்களை வீட்டுக்கு எடுத்து வந்து பராமரித்தார்.
இந்நிலையில், தனது மனைவியின் எல்லைமீறிய செல்லப்பிராணி பாசத்தால் ஏற்பட்ட கொடுமைகளைத் தாங்க முடியாமல், உடனடியாக விவாகரத்து வழங்கக் கோரி குடும்பநல நீதிமன்றத்தில் கணவர் தனது மனைவியின் எல்லைமீறிய செல்லப்பிராணி பாசத்தால் ஏற்பட்ட கொடுமைகளைத் தாங்க முடியாமல்,
கணவன் வேதனை
உடனடியாக விவாகரத்து வழங்கக் கோரி குடும்பநல நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இரவு நேரங்களில் தன் அருகில் தூங்குவதைவிட, அந்த நாய்களுடன்தான் அவர் அதிக நேரம் தூங்கினார் என்றும், மனைவியின் இந்தச் செயல் தனக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியதாகவும் கணவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

அந்தப் பெண் மீது போலீசில் புகார் அளித்தபோதும், அவர் விலங்குகள் நல வாரியத்தில் உறுப்பினராகச் சேர்ந்து, பொதுமக்கள் மீது குற்றம் சாட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் கணவர், கடந்த 2007-ம் ஆண்டு பெங்களூருக்குத் தப்பி ஓடினார்.
அதற்குப் பின்பும், மனைவி தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும், தெரு நாய்களைத் திருமணம் செய்துகொண்டது போன்ற புகைப்படங்களைக் காட்டி தன்னை வெறுப்பேற்றியதா தெரிவித்துள்ளார். இதன் காரணமாகத் தான் மன அழுத்தத்தால் தனது ஆண்மையை இழந்து விட்டதாகவும்,
மனைவிக்கு ரூ.15 லட்சம் ஜீவனாம்சம் கொடுக்கத் தயார் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், கணவரின் குடும்பத்தினர் வெளிநாட்டில் விடுதிகள் (Resorts) நடத்தி வருவதால் தனக்கு ரூ.2 கோடி ஜீவனாம்சம் வேண்டும் என மனைவி எதிர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு டிசம்பர் 1-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது