திருமண நாளில் எமனாக வந்த இரும்பு கம்பி - பிள்ளைகள் கண்முன்னே தாய் துடிதுடித்து பலி!

Ceylon Electricity Board Crime Thanjavur
By Vidhya Senthil Nov 09, 2024 11:30 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

 திருமண நாளில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர்  உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் -தங்கமணி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் லட்சுமணன் -தங்கமணி திருமண நாளான நேற்று (நவ.9) கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளனர்.

woman killed by electrocution on wedding day

அப்போது திருவோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனையடுத்து மழை நின்றபிறகு தங்கமணி துவைத்த துணிகளை வெயிலில் காய வைப்பதற்காக வந்துள்ளார். அங்கு வீட்டில் உள்ள இரும்பு கம்பியில் மற்றொரு சிறிய கம்பியைக் கட்டி வைத்துள்ளனர்.

இயற்கைக்கு மாறாக.. மூச்சுத்தினறி உயிரிழந்த 8 வயது சிறுமி - 3 பேருக்கு தூக்கு தண்டனை!

இயற்கைக்கு மாறாக.. மூச்சுத்தினறி உயிரிழந்த 8 வயது சிறுமி - 3 பேருக்கு தூக்கு தண்டனை!

 உயிரிழந்த சம்பவம் 

இந்த சுழலில் வீட்டில் உள்ள இரும்பு கம்பியின் மூலம் கொடி கம்பி மீது மின்சாரம் பாய்ந்து தங்கமணி மீது மின்சாரம் தாக்கியது. இதில் மூக்கில் ரத்தத்துடன் சுருண்டு விழுந்து துடித்துள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் தங்கமணியை மீட்டு சிகிச்சைக்காகப் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம்

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தங்கமணி ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவோணம் காவல்துறை தங்கமணி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

திருமண நாளில் மின்சாரம் தாக்கி பெண்  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.