4 வருஷமா சடலத்துடன் குடும்பம் நடத்திய பெண்; மம்மியான கணவன் - பகீர் பின்னணி!
சடலத்துடன் 4 ஆண்டுகள் பெண் ஒருவர் குடும்பம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த கணவன்
ரஷ்யா, ஸ்டாரோசிவர்ஸ்காயா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்வெட்லானா(50). இவரது கணவர் விளாதிமிர்(49). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இங்கு குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்க சமூக நல பணியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இவர்கள் ஒவ்வொரு வீடாக செல்லும் போது இவர்கள் வீட்டிற்கும் வந்து, குழந்தைகளை பரிசோதித்துள்ளனர். அப்போது, குழந்தைகள் மனதளவில் பதற்றமடைந்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, வீட்டை சோதனையிட்டதில், முற்றிலும் காய்ந்துபோன, ஏறத்தாழ ஒரு மம்மியை போன்ற சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே, தகவலின் பேரில் போலீஸார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், ஸ்வெட்லானாவுக்கும் கணவர் விளாதிமிருக்கும் சம்பவத்தன்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவி ஆத்திரத்தில் நீ செத்து போயிடுவ என சாபமிட்டுள்ளார்.
சடலத்துடன் வாழ்க்கை
அதன்படி, சில மணி நேரங்களில் கணவர் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி வெளியில் தெரியாமல் இருக்க உடலை போர்வையில் சுற்றி தன்னுடைய படுக்கையறையில் வைத்துள்ளார். இதனையறிந்த குழந்தைகளிடம் வெளியே சொன்னால் ஆசிரமித்தில் சேர்த்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
மேலும், சடலத்துடன் 4 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளனர். அவருக்கு சடங்கு செய்ய சிலுவை, மந்திர கயிறுகள், குள்ளநரியின் மண்டை ஓடு போன்றவற்றை அறையில் வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "அவர் இருந்திருந்தால் இதைத்தான் விரும்பியிருப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது 5 பேரையும் மனநல பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பனி அதிகம் பொழிவதால் உடல் அழுகாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.