சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றமில்லை- கர்நாடக நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு

Karnataka Crime
By Irumporai Jun 02, 2023 03:26 AM GMT
Report

சடலத்துடன் உடலுறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றமில்லை என்று கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக நீதிமன்றம் 

கர்நாடக மாநிலம் துமகூருவை சேர்ந்த ரங்கராஜ் என்பவர், கடந்த 2015-ம் ஆண்டு இளம்பெண் ஒருவரை கொலை செய்து, அந்த சடலத்துடன் உடலுறவு கொண்டார். இந்த வழக்கை விசாரித்த துமகூரு கோர்ட்டு, ரங்கராஜுக்கு ஆயுள் தண்டனையும், சடலத்துடன் உடலுறவு கொண்டதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்திருந்தது.

சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றமில்லை- கர்நாடக நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு | Crime Karnataka Court Sensational Verdict

குற்றமில்லை 

இதை எதிர்த்து ரங்கராஜ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்கியது. கொலை குற்றத்திற்கான ஆயுள் தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்டு சடலத்துடன் உடலுறவு கொண்டதற்கான தண்டனையை ரத்து செய்தது.

சட்டப்படி இறந்த உடலை மனிதராக கருத முடியாது என்றும், இயற்கைக்கு மாறான உடலுறவு, கற்பழிப்பு போன்ற சட்டப்பிரிவுகள் இந்த குற்றத்திற்கு பொருந்தாது என்றும் தெரிவித்தது.

இறந்த உடலுடன் உடலுறவு கொள்வதை குற்றம் என்பதை உறுதி செய்ய சட்டத்தில் திருத்தம் செய்யவோ அல்லது புதிய சட்டத்தையோ மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.