குக்கரில் வேக வைக்கப்பட்ட காதலி உடல் - துண்டு துண்டா வெட்டி நாய்க்கு போட்ட காதலன்!
காதலியை வெட்டி காதலன் நாய்க்கு போட்ட சம்பவம் பகீர் கிளப்பியுள்ளது.
லிவ் இன்
மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் மனோஜ் சாஹனி(52). இவர் தனது 32 வயது காதலியுடன் மிரா பகுதியில் உள்ள அபார்ட்மண்டின் 7வது மாடியில் லிவ் இன் முறையில் வசித்து வந்துள்ளார். 3 ஆண்டுகளாக அவர்கள் அங்கிருந்துள்ளனர்.
இந்நிலையில், திடீரென அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பூட்டியிருந்த கதவை உடைத்து பார்த்த போது துண்டு துண்டாக பெண்ணின் சடலம் கிடந்துள்ளது.
கொடூர கொலை
அதனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், காதலர் மனோஜ் சாஹனி என்பவர் பெண்ணை கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.
மேலும் சில உடல் பாகங்களை குக்கரில் வேக வைத்து நாய்க்கு உணவாக போட்டதும் தெரியவந்தது.
அதன் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.